பக்கங்கள்

புதன், 28 ஆகஸ்ட், 2013

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !


 
 
BatteryInfoView .
 
இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .
 
மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல் நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது.  

நன்றி: தகவல் களஞ்சியம்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்

இயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும், அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும். 


மென்பொருளை தரவிறக்க சுட்டி

புதன், 7 ஆகஸ்ட், 2013

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு




சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும்.
இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் எழுத்துக்களைக் கொண்டோ அல்லது லோகோவைப் பயன்படுத்தியோ வாட்டர்மார்க்கினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி

கூகிள் போன்ற மற்றொரு தேடுதளம்

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு வி
யத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.


 

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.


மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.

 இணையதள முகவரி :

கணணி பாவனையின் பொது மின்சக்தியை மிச்சப் படுத்தும் வழிகள்

 
 
 
 
 
 
 கணணி  பயன்பாட்டில் செலவழிக்கப்படும் மின்சக்தி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அதிலும் நாம் முயன்றால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.

1.மொனிடர் திரையின் வெளிச்சத்தை  குறைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

2.  கணணி பயன்படுத்தி முடித்தபின்னர் உடனே அதற்கு செல்லும் மின் சக்தியை நிறுத்தி ஆப் செய்திடவும். தேவையில்லாமல் sleep  mode இல் வைக்க வேண்டாம்.

3. இன்னும் பழைய சி.ஆர்.டி. (டிவிக்களில் பயன்படுத்தப்படும் கதோட் ரே ட்யூப் ) கொண்ட  மொனிடர்  பயன்படுத்துவதாக இருந்தால் உடனே எல்.சி.டி.  மொனிடருக்கு மாறவும். ஏனென்றால் எல்.சி.டி மானிட்டர் சி.ஆர்.டி.  மொனிட ன் மின் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு மின் சக்தியையே பயன்படுத்துகிறது. அது மட்டுமின்றி கண்களுக்கும் அதிக வேலைப் பளுவைத் தருவதில்லை.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

speedy painter-கணனியில் ஓவியம் வரைவதற்கான இலவச மென்பொருள்

ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.
இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

CD/DVD பழுதடைந்து விட்டதா? இலகுவாக சரி செய்து விடலாம்

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.
பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

உங்கள் கணணி வேகமாக இயங்க மறுக்கிறதா? இதோ தீர்வு.

உங்கள் கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க உங்களுக்கு சில டிப்ஸ்கள்.
உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் .

 புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

சனி, 3 ஆகஸ்ட், 2013

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன் - Safe Mode!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்வது, முந்தைய சிஸ்டங்களில் மேற்கொண்டதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சிஸ்டத்திலும் சேப் மோடில் பூட் செய்திடலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.