பக்கங்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2013

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.
இவ்வகையான சம்பவங்கள் இணையப் பாவனையின் போது அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு கணனிப் பாவனையாளர்களை அறியாமல் அவர்களது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள வயதுக்கட்டுப்பாடுடைய (ஆபாசமான) வீடியோ கோப்புக்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கான் மூலமாக கண்டறிந்து அவற்றினை இலகுவாக நீக்குவதற்கு Media Detective எனும் மென்பொருள் உதவுகின்றது.
எனினும் இம்மென்பொருளானது குறித்த கோப்பு வகைகள், அவற்றின் பெயர்கள், போன்றவற்றின் அடிப்படையிலேயே இச்செயன்முறையை மேற்கொள்ளுகின்றது.
தரவிறக்கச் சுட்டி


நன்றி: மீன்மகள் 

புதன், 24 ஜூலை, 2013

கணிணியிடமிருந்து கண்களை பாதுகாக்க ஒரு மென்பொருள் .........................

நம்முடைய கணணியை காப்பாற்ற நிறைய ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள்  உள்ளன. ஆனால் நம் கண்களை பாதுகாக்க....?

இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள், சிலருக்கு கண்ணில் நீர் வரும்.

பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மானிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மானிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இந்த  சாப்ட்வேர் மிகவும் பயன்படும்.

கிழ்க்கண்ட தளத்திற்க்குச்சென்று  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.

3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.
இது முற்றிலும் இலவசமானது.

கீழ்க்கண்ட தளத்திற்குச்சென்று தரவிறக்கம் செய்யவும்.
இணையதள முகவரி :http://justgetflux.com/
இப்பொழுது நீங்கள் இரவு நேரங்களில்  நீண்டநேரம் கண்சோர்வின்றி பணிபுரியலாம். வேலையும் பார்த்தாச்சு... கண்ணுக்கும் பாதுகாப்பு ஆச்சு.
நன்றி :http://bakrudeenali.blogspot.in........... 

புதன், 10 ஜூலை, 2013

ஒரே கிளிக்கில் கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு

இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது.
இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.
இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.
தரவிறக்கச் சுட்டி

செவ்வாய், 9 ஜூலை, 2013

மிகப்பெரிய அளவுடைய கோப்புக்களை சிறிதாக்கு​வதற்கு .................

இணையம் என்பது பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் மனிதனுக்கு உதவி புரிகின்றது. இதில் கோப்புகளை பரிமாற்றம் செய்வதும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
எனினும் அளவில் பெரிய கோப்புக்களை பரிமாறும் போது அதிக நேரம் செலவாவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே இப்பிரச்சினையை தவிர்ப்பதற்கு கோப்புக்களின் அளவை சிறிதாக்குதல் சிறந்த வழியாக காணப்படுவதுடன் இதற்காக பல்வேறு மென்பொருட்களும் காணப்படுகின்றன.
எனினும் தற்போது அறிமுகமாகியுள்ள KGB Archiver எனும் மென்பொருள் ஏனையவற்றைவிட சிறந்ததாக கருதப்படுகின்றது. காரணம் இதன் உதவியுடன் 1GB அளவுடைய கோப்புக்களை 10MB அளவிற்கு குறைக்க முடியுமாக இருப்பதுடன் பின்வரும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

சிறப்பு :
1. .kgb, .zip போன்றவற்றிற்கு நிகரான கோப்புக்களை பயன்படுத்த முடிதல்.
2. யூனிகோட்டினை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுதல்.
3. தானாகவே கோப்புக்களை சுருக்கும் வசதியை கொண்டிருத்தல்.
4. கடவுச்சொற்களின் மூலம் சுருக்கப்பட்ட கோப்புக்களை பாதுகாக்க முடிதல்.
இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் இயங்குத்தளங்களில் செயற்படக்கூடியது. அத்துடன் இதை நிறுவுவதற்கு கணணியில் குறைந்தது 256 MB RAM, 1.5 GHz Processor ஆகியன காணப்படுதல் வேண்டும்.
 தரவிறக்க சுட்டி

Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்

முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனத்தின் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
எனவே 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு மேலதிக நீட்சிகளோ அல்லது மூன்றாம் நபர் மென்பொருட்களையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கச் சுட்டி 

Windows, Mac & Linux
Android

இணைய விளம்பரங்க​ள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பதற்கு

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இணையத்தளங்களை பயன்படுத்தும்போது, தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.
இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி

திங்கள், 1 ஜூலை, 2013

தூசுகளால் நம்முடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுமா ?

ஆம் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் கணினி இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக கணினியின் உள்பகுதியின் பாகங்களை குளிர்விப்பதற்கான காற்றாடியில் இந்த தூசுகள் படிந்து வெளிக்காற்று கணினிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன அதனால் கணினியின் உள்பாகம் மிக அதிக வெப்பமாகி கணினியின் உள்உறுப்புகள் பாதிப்படைவதற்கு ஏதுவாகின்றது மேலும் இவ்வாறு ஏற்படும் அதிகவெப்பத்தினை குறைப்பதற்காக இந்த காற்றாடியானது மிகவேகமாக ஓடவேண்டிய நிலைஏற்படுகின்றது இவ்வாற காற்றாடி மிகவேகமாக ஓடும் சத்தத்தை வைத்தே தூசுகள் காற்றாடியில் அதிகஅளவிற்கு படிந்துள்ளதை அறிந்து கொள்ளமுடியும்

இந்நிலையில் நம்முடைய கணினியின் சிபியூ எவ்வளவு வெப்பநிலை உள்ளது என CoreTemp என்ற பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்து அறிந்து கொள்ளலாம் பொதுவாக இயல்புநிலையில் எந்த பயன்பாடுகளும் இயங்காமல் கணினிமட்டும் இயங்கிடும் வழக்கமான நல்ல நிலைஎனில் 55 டிகிரி இருக்கவேண்டும் அதைவிட அதிகமாக இருந்தால் கணினியின் உட்பகுதி தூசுகள் படிந்துள்ளன என அறிந்து கொள்ளலாம் பொதுவாக அனைத்து சிபியூவும் junction அல்லது thermal cutoff என அமைத்திருப்பார்கள் அதற்கு மேல் எனில் சிபியூ இயங்காத வண்ணம் அமைத்திருப்பார்கள்

அவ்வாறே நம்முடைய கணினியின் வன்தட்டு எவ்வளவு வெப்பநிலை உள்ளது என CristalDiskInfo   என்ற பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்து அறிந்து கொள்ளலாம் எந்த பயன்பாடுகளும் இயங்காமல் கணினிமட்டும் இயங்கிடும் வழக்கமான நல்ல நிலைஎனில் 20 முதல் 55 டிகிரி இருக்கவேண்டும்

அதுமட்டுமின்றி இவ்வாறான தூசுகள் கணினியின் ports , connections ஆகியவற்றில் படிந்து தவறான இணைப்பையும் இணைப்பே ஏற்படுத்தமுடியாத நிலையையும் உருவாக்கிடும் மேலும் கணினியின் உள்உறுப்புகள் பாதிப்பாகி அவைகளை அதிக செலவிட்டு புதியதாக மாற்றியமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்

அதனால் மடிக்கணினிஎனில் காற்றோட்டமான பகுதியிலும் மேஜைக்கணினியெனில் அதனுடைய சுற்றுப்புற பக்கத்தில் வைத்துள்ள பலகத்தையும் கழற்றி வைத்தபின் ஏர்கம்ப்பிரஸ்ஸர் அல்லது வேக்கம் கிளினர் அல்லது Swiffer/liquid-free dusting துனியை கொண்டு கணினியின் உட்பகுதியில் உள்ள தூசுகளை அவ்வப்போது சுத்தபடுத்தி நம்முடைய கணினியை தூசகள் படியாமல் சுத்தமாக வைத்து கொள்வது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது

உங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை

கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.

யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

எந்த பரபரப்பான விஷயம் நடந்தாலும் அது யூடியூபில் உடனடியாக வீடியோவாக அப்லோட் செய்யப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு முறை வீடியோவினை பார்க்கும் போது அதில் முதல் 5 நிமிடங்கள் அல்லது, 8 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதனால் விருப்பமான வீடியோவினை பார்க்கும் போது, அந்த விளம்பரத்தினை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.
ஆனால் இதை தவிர்க்கவும் நிறைய வழிகள் உள்ளது. இந்த வீடியோக்களை எப்படி தவிர்ப்பது என்பதன் வழிகளை இங்கே பார்க்கலாம்.
கூகுள் க்ரோமில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்கிப் ஏட்ஸ் ஆன் யூடியூப் அல்லது யூடியூப் எக்ஸ்டென்ஷன் என்பது போன்ற வாசகத்தினை கொடுத்து கூகுள் க்ரோமில் முதலில் எக்டன்ஷன்கள் தேட வேண்டும்.
அதன் பிறகு எக்டன்ஷன்களை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
அந்த எக்ஸ்டன்ஷன் பக்கத்தில் ஏட் க்ரோம் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை க்ளிக் செய்தால் ப்ளூ கலரில் ஒரு பட்டன் சேர்வதை பார்க்க முடியும்.
இந்த பட்டனை உபயோகித்து யூடியூப் வீடியோவில் வரும் விளம்பரங்களை எளிதாக தவிர்க்க முடியும்.
க்ரோமில் மட்டும் அல்லாமல் ஃபையர்ஃபாக்ஸிலும் இந்த எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக இருக்கிறது.

கணினியின் IP எண்ணை வைத்தே பயன் படுத்துபவர்களின் விவரங்கள் அறிய


நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.

இண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்!                                    


 இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை ,  இலவசமாக இந்த மென்பொருளைஇங்கு கிளிக் செய்து தரவிறக்கம்
செய்து உங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்

RAM மெமரியை கிளீன் செய்து வேகத்தை அதிகரிப்பது எப்படி???

இந்த செய்தி  சிலருக்கு பழைய செய்தி  இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணினியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணினியின்  வேகம் ஆனது குறைவடைந்து விடும்
அந்த வேளையில் நம்  (RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணினியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்
01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.
02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)
03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.
04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.
05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்..