பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

100 பயனுள்ள Run command

பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...






   1)  Accessibility Options : access.cpl
2)    Add Hardware : hdwwiz.cpl
3)    Add / Remove Programs : appwiz.cpl
4)    Administrative Tools : control admintools
5)    Automatic Updates : wuaucpl.cpl
6)    Wizard file transfer Bluethooth : fsquirt
7)    Calculator : calc
8)    Certificate Manager : certmgr.msc
9)    Character : charmap
10)   Checking disk : chkdsk
11)    Manager of the album (clipboard) : clipbrd
12)   Command Prompt : cmd
13)   Service components (DCOM) : dcomcnfg
14)   Computer Management : compmgmt.msc
15)   DDE active sharing : ddeshare
16)   Device Manager : devmgmt.msc
17)   DirectX Control Panel (if installed) : directx.cpl

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வேகமாக Copy செய்யக்கூடிய ஓர் சிறந்த மென்பொருள். (HIGH SPEED COPYING)

உங்களது தகவல்களை மிக வேகமாக Copy செய்யக்கூடிய மென்பொருளை நாம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். WinMend File Copy எனும் மென்பொருள் மூலம் நாம் வேகமாக Copy செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் மூலம் ஓரிரு செக்கன்களில் 10MB File ஐ Copy செய்ய முடியும். இம்மென்பொருள் எமது வேலைகளை துரிதப்படுத்தக் கூடியதாகவும் அமையும். சில நேரங்களில் நாம் அவசரத் தேவையின்போது விரைவில் Copy செய்வதற்கும் இம்மென்பொருள் உதவுகிறது.. 


 



சனி, 12 அக்டோபர், 2013

கணினிக்கு தேவையான டிரைவர்களை நிறுவ மற்றும் அப்டேட் செய்ய இலவச மென்பொருள்

உங்கள் கணிணியில் ஒலி வரவில்லையா ,சில கேம்களை விளையாட முடியவில்லையா இவைகளுக்கு காரணம் தேவையான கணிணி டிரைவர்கள்(Drivers) உங்கள் கணிணியில் இல்லாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்து போயிருக்கலாம்.புதிதாக விண்டோஸ் நிறுவிய பின்னர் சில நேரங்களில் டிரைவர்கள் இல்லாமல் போகலாம். இவற்றை உங்கள் கணிணிக்கு ஏற்ற டிரைவர்களை கண்டு பிடித்து நிறுவுவது கடினம். slimdriver என்ற இந்த மென்பொருள் இந்த வேலையை எளிதாக்குகிறது.




எனது கணிணியில் ஒரு கேம் விளையாட முடியவில்லை பல நாளாக ஏதோ display டிரைவர் இல்லை என வந்தது.எந்த டிரைவர் என அறிய முடியவில்லை.மேலும் கணிணியில் ஒலி வந்தது ஆனால் யாருடனாவது head phone இல் chatல் பேசும் போது அதில் ஒலி வரவில்லை ஆனால் speakerல் வந்தது.இந்த இரு பிரச்சனைகளையும் இந்த slimdriver மூலம் எளிதாக தீர்க்க முடிந்தது. இந்த மென்பொருளின் இலவச பதிப்பே போதுமானது.


இந்த மென்பொருளை நிறுவிய பின் start scan என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் இல்லாத அல்லது அப்டேட் செய்ய வேண்டிய டிரைவர்களை காட்டும்.அதில் உங்களுக்கு தேவையான டிரைவர்களை download update என்பதை கிளிக் செய்து நிறுவி கொள்ளவும்.
Download for Windows 7, XP, and Vista



நன்றி :alliswellfriendz
 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?


தாங்கள் அழித்த பைல்Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.

நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.

இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!

Photoshop போன்றே ஒரு மென்பொருள் Gimp

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும்.

 இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான Softwere

இன்று பேஸ்புக்  மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.