விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும்
பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது
வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை
பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி
இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB
வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.
விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட சிறந்ததொரு மென்பொருள் VSUsbLogon ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
தரவிறக்க சுட்டி :
http://www.lokibit.com/download.htm#vsusblogon
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி
கணினியில் நிறுவிக்கொள்ளவும்.பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து
கொண்டு பின் இந்த VSUsbLogon அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் கணினியில்
USB ட்ரைவினை கணினியில் இணைக்கவும்.