Blogger Widgets

பக்கங்கள்

திங்கள், 27 ஜனவரி, 2014

USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட

விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.
விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட சிறந்ததொரு மென்பொருள் VSUsbLogon ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
தரவிறக்க சுட்டி :
http://www.lokibit.com/download.htm#vsusblogon
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த VSUsbLogon  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் கணினியில் USB ட்ரைவினை கணினியில் இணைக்கவும்.

பின் நீங்கள் கணினியில் இணைத்த USB ட்ரைவானது அப்ளிகேஷனில் காட்டும். அதை தெரிவு செய்து பின் Assign என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நம்முடைய விண்டோஸ் பயனர் கணக்கிற்கு என்ன கடவுச்சொல்லை உருவாக்கினமோ அதே கடவுச்சொல்லை இங்கும் உள்ளிடவும். அடுத்து Auto Logon எனும் செக்பாக்சை டிக் செய்து கொள்ளவும். பின் Check Password எனும் பொத்தானை அழுத்தி ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.
இதற்கு முன் விண்டோஸ் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பின் OK பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் பயனர் கணக்கிற்கு USB பூட்டு உருவாக்கப்பட்டுவிட்டதாக செய்தி வரும்.
பின் கணினிக்குள் நீங்கள் உள்நுழையும் போது கடவுச்சொல் கேட்கும் அதற்கு பதிலாக USB ட்ரைவினை கணினியில் பொருத்தினால் போதும் பயனர் கணக்கு தானகவே திறக்கும்.
இயங்குதளங்கள்
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா , ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களுக்கு பொருந்தும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக