பக்கங்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2013

அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்

கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.
இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும்.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருள் மூலம் MP3, WMV, MID, WAV, AVI, WMV, FLV, MPG, MOV மற்றும் MP4 கோப்புக்கள், PNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW போன்ற புகைப்படக் கோப்புக்கள் உட்பட Word, PowerPoint, Excel, Outlook போன்ற அப்பிளிக்கேஷன்கள் மூலம் தயாரிக்கப்படும் கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி

PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவதற்குடெக்ஸ்ட், புகைப்படங்களை உள்ளடக்கிய PDF கோப்புக்கள் பொதுவாக பாதுகாப்பு மிகுந்தவையாகவே காணப்படும்.
இதனால் இவற்றில் எந்தவிதமான எடிட்டிங்கினையும் மேற்கொள்ள முடியாது காணப்படுவதுடன், அவற்றிலுள்ள விடயங்களை பிரதி பண்ண முடியாமலும் இருக்கும்.
எனவே இவ்வாறான நோக்கங்களுக்காக குறித்த PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவது சிறந்ததாகும்.
இதற்கென PDF Shaper எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. சிறிய கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் மூலம் கடவுச்சொற்கள் கொடுத்து பாதுகாக்கப்பட்ட PDF கோப்புக்களையும் மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் புதிய மென்பொருள்

டிஜிட்டல் கமெராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை தேவைக்கு ஏற்றாற்போல் எடிட்டிங் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் நாளுக்கு நாள் புதிய அம்சங்களை உள்ளடக்கிய மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இவற்றின் வரிசையில் BatchPics எனும் புதிய மென்பொருள் இணைந்துள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் பல்வேறு எபெக்ட்களை ஒரே தடவையில் பல புகைப்படங்களுக்கு சேர்க்க முடிவதுடன், அளவுகளை மாற்றியமைத்தல் மற்றும் புகைப்படங்களின் பெயர்களை வகைகளின் அடிப்படையில் மாற்றியமைத்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.
இலகுவாக கையாளக்கூடிய மேலும் இம்மென்பொருளானது புகைப்படவியளார்கள், இணையத்தள வடிவமைப்பாளர்கள், போன்றவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்

சனி, 29 ஜூன், 2013

Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.
 
அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack என்ற மென்பொருள் உதவுக்கிறது.
 
இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே DOWNLOAD பண்ணும்.நீங்கள் Online இல்லாத நேரத்தில் வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
  
Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் Next யை கிளிக் செய்யவும்
 
அதில் Project name மற்றும் Project category ஏதாவது Name கொடுக்கவும். அதில் path nameயை கொடுத்து next கொடுக்கவும்.
 
அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு Nextகொடுக்கவும்.
 
அதன் பிறகு finish கொடுக்கவும்.Webpage Download ஆகும். webpage download முடித்தவுடன் நீங்கள்save செய்த file யை open பண்ணவும்.
 
அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதைopen பண்ணி index என்ற file யை open பண்ணவும்.
தரவிறக்க சுட்டி :http://winhttrack-website-copier.software.informer.com/
 

DOWN LOAD செய்கிறீர்களா ? எச்சரிக்கை குறிப்புகள்


இணையதளத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏதாகினும், ஒரு மென்பொருளை தங்களது தேவைகளுக்கேற்ப இணையதளத்தில் டௌன் லோட் செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது.
 
குறிப்பாக, இலவச மென்பொருட்களை நம்மில் பலர் டவுன் லோட் செய்து பயன்படுத்துகிறோம். இலவசமாக வழங்குவதன் மூலம், அந்த நிறுவனத்திற்கு நன்மை இருக்கவே செய்கிறது.
 
ஒன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்துவது.
 
மற்றொன்று அந்த மென்பொருளை டவுன் லோட் செய்யும்போது, டவுன் லோட் செய்யப்படுகிற மென்பொருளோடு ஸ்பை வேர், வைரஸ், போன்ற ப்ரோக்கிராம்களும் சேர்ந்து தரவிறங்கும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பாலான இலவச மென்பொருட்கள் இரண்டாவது வகையைத்தான் பின்பற்றுகின்றன. அப்படியெனில், இலவச மென்பொருள்களை பயன்படுத்துவது ஆபத்து என பொருளல்ல.
 
இலவச மென்பொருள்களை தாராளமாக பயன்படுத்தலாம். அதனுடன் சேர்ந்து, நமது கணிணியில் டவுன் லோடு ஆகும் ஸ்பை வேர், வைரஸ்களை நீக்குவது முக்கியம்.
 
நாம் டவுன்லோடைப் பயன்படுத்தும் மென்பொருட்களில் இதுபோன்ற தேவையற்ற ப்ரோக்ராம்கள் இருப்பதால், அவற்றை நீக்க வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள், ஸ்பைவேர் க்ளீனர் போன்ற நன்மை தரும் ப்ரொக்ராம்களை இயக்கி, அவற்றை நீக்கிவிடலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமும் இது போன்ற தேவையற்ற ப்ரோக்ராம்களை நீக்கி விடலாம்.
 
நாம் ஒரு இணையபக்கத்தில் டவுன் லோட் செய்யும்முன்பு, அப்பக்கத்தில் உள்ள இணைப்பின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
 
அம்மென்பொருளை பற்றி அளித்துள்ள கருத்துக்களையும், அப்பக்கத்தில் படித்து முடித்த பிறகே டவுன் லோட் செய்யத் தொடங்கவேண்டும். அவ்வாறு படிப்பதன் மூலம் ஓரளவிற்கு அம்மென்பொருட்களின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
 
மென்பொருள்களுக்குரிய உண்மையான தளத்திலிருந்து, டவுன் லோட் செய்வது நல்லது. பிற தளங்களிலிருந்து டவுன் லோட் செய்வது, பாதுகாப்பிற்கு சரியானதல்ல.
 
GOOGLE, YAHOO  போன்ற மிகப் பிரபலமான தேடல் வலைத்தளங்களைத் திறந்து, அதில் நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டிய மென்பொருளின் பெயர், அக்கோப்பின் பெயர், இவற்றோடு SPYWARE, VIRUS என்ற சொற்களையும் கொடுத்து தேடினால், இதற்கு முன்பே இம்மென்பொருட்களை டவுன்லோட் செய்து, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அவைகளைப் பற்றி மற்ற பயனர்கள் எழுதியிருப்பர், எச்சரிக்கை செய்திருப்பார்கள்.
 
இவ்வாறு தேடுவதால் மென்பொருளைப் பற்றி, பிறரின் எண்ணங்கள், கருத்துக்கள், பாதுகாப்பு நன்மைகள் குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். எனவே, அந்த மென்பொருளைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
 
நாம் டவுன் லோட் செய்யவேண்டிய மென்பொருள் நல்லதா, கெட்டதா  எனத் தெரிந்துவிடும்.
 
டவுன் லோட் செய்து மென்பொருள் கோப்பினை நிறுவுவதற்கு முன், கணிணியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பயன்படுத்தி, சோதனை செய்து கொள்வது நல்லது. இதனால், மென்பொருளை நிறுவிய பிறகு ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துவிடலாம்.
 
இறுதியாக கணிணியில் உள்ள கோப்புகளை அடிக்கடி, பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கணிணியில் ஏதேனும் அபாயகரமான வைரஸ் தாக்குதல் ஏற்படும்போது கூட நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். தேவையெனில், கணிணியை ரீ – ஸ்டோர் செய்வதன்மூலம் மீண்டும் கணிணி பழைய நிலைக்கு வந்துவிடும்.
 
இவ்வாறு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மேற்கொள்வதன்மூலம் கணிணியில் வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தடுக்கமுடியும். நம்முடைய தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

செவ்வாய், 25 ஜூன், 2013

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன ?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.


காரணங்கள்:

மிகக் குறைந்த Hard Disk Space
நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
Data Corruption
அதிக சூடாகுதல்
Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
Hardware Problems
Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.

பென்டிரைவ் மற்றும் கணினியில் கோப்புகளை மறைத்துவைக்க உதவும் மென்பொருள்...

பென்டிரை மற்றும் கணினியில் உள்ள கோப்புகளை ஏன் மறைக்க வேண்டும்?

இதற்கு ஒரு சில காரணங்கள் சொல்ல முடியும். உதாரணமாக உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய கோப்புகள்(Secret files or secret folders) அதில் இருக்கலாம். எனவே அதை பிறர் பார்க்காதபடி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதேபோல உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகை, நடிகர்கள்(Cinema actress photos  or personal photos) படங்களை வைத்திருக்கலாம். அதை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும்.

ஒரே பென்டிரைவை பலர் பயன்படுத்த நேரிடும்போது உங்கள் கோப்புகளை தவறுதலாக மற்றவர்கள் கையாள நினைக்கலாம். எனவே கோப்புகளை மறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

கணினியில் உள்ள ட்ரைவ்களை மறைத்து வைக்க...

நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,


உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.

ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள .................


நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம்  கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.

பெரிய (2GB) கோப்புகளை (File) அனுப்ப…

நாங்கள் ஒரு பெரிய கோப்புக்களை (File) மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம்..ஒரு கட்டணம் செலுத்தாமல் yahoo,  gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
அதற்கு மிகப்பெரிய வசதிகளை தருகிறது கட்டணம் செலுத்தாத ஒரு தளம் drop send என்ற தளம் இதற்கு உதவிபுரிகிறது. மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் ஏற்றிவிட்டு( upload) கிடைக்கும் தரையிறக்க சுட்டிகளை( Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்..
இணையதள முகவரி :http://www.dropsend.com/

உங்கள் கணிணியில் Cut, Paste, Copy, Delete, Rename தடை செய்ய சிறு மென்பொருள்

நண்பர்களே சிலர் மட்டுமல்ல எல்லோருமே நினைக்கும் விஷயம் நம் கணிணியில் நம் மட்டுமே எதையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.ஏன் என்றால் யாரவாது தெரியாமல் உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளை அழித்து விடலாம். அல்லது பெயர் மாற்றம் செய்யலாம். நமக்கு தெரியாமல் அவர்களுடைய பென் ட்ரைவில் காப்பி செய்து எடுத்து செல்லலாம். இது போன்று நேராதிருக்கு உங்கள் நண்பர் அல்லது குழந்தைகளிடம் கணிணியை வேலை செய்ய கொடுக்கும் பொழுது இந்த மென்பொருளை ஆன் செய்து விடுங்கள் போதும். இதையெல்லாம் அவர்களால செய்யவே முடியாது.

உங்க வெப்சைட் ஹேக் செய்யப்படாமல் இருக்கனுமா?

நிறைய தமிழ் நண்பர்கள் வெப்சைட் அல்லது ப்ளாக்குகளை நடத்திவருவது பாராட்டப்படவேண்டியது. மேலைநாடுகளில், பள்ளிகளில் பயில்பவர்கள் கூட ப்ளாக் வைத்திருப்பார்கள். ஆனால் நம்மில் பலருக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையும் படுவதில்லை, தெரிந்துகொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை.

சரி. நீங்கள் வெப்சைட், அல்லது ப்ளாக் வைத்திருந்தால் அதை ஹேக்கர்கள் தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? தகவல்கள் கீழே!

சனி, 22 ஜூன், 2013

விண்டோஸ் 7யை முழுமையாக தமிழில் பயன்படுத்த

கணனி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம்.
அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.
இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விடயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விடயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.
அந்த வகையில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் கொண்ட கணனியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack – LIP) தரவிறக்கம் செய்யுங்கள்.
32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.
உங்கள் கணனியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணனியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணனியில் இன்ஸ்டால் ஆகும்.
இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து “Apply display language to welcome screen and system accounts” என்பதை கிளிக் செய்து “Change Display Lanugage” என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் கணனியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.
இனி உங்கள் கணனி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விடயங்கள் தமிழில் இருக்கும்.
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணனியில் அடிப்படை விடயங்களை செய்ய முடியும்.
மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் “விசைப்பலகைகளும் மொழிகளும்” என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தெரிவு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கான தமிழ் இணையதள சுட்டி

வெள்ளி, 7 ஜூன், 2013

மல்வேர்களைத் தடுப்பதில் முதலிடத்தைப் பிடித்தது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10!

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், பிரவுசர்களுக்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடம் குரோம் பிரவுசருக்கு உள்ளது. என்.எஸ்.எஸ். லேப்ஸ் (NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது. 700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 நாட்களாக, குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவீத மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர், 83 சதவீத மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது. சபாரி மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் 10 சதவீத மால்வேர்களையே தடுக்க முடிந்தது. ஆப்பரா பிரவுசரின் அண்மைப் பதிப்பு 2 சதவீத மால்வேர்களையே தடுத்தது.

புதன், 5 ஜூன், 2013

மொபைல் போனில் தமிழ் தளங்களை பர்ர்ப்பது எப்படி.....

உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் தளங்களை பார்ப்பது சிலருக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கும்...

இதனை சில setting களின் மூலம் நிவர்த்தி செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில் வாயிலாகவே தமிழ் தளங்களை பார்வையிடலாம்....

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1.முதலில் உங்கள் போனில் ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.(தரவிரக்க
http://www.opera.com/mini/ )


2.மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

3.தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்

பிரச்சினை தீர்ந்தது ................
இனி நீங்கள் எந்த தங்கு தடையும் இன்றி உங்கள் போனில் தமிழ் தளங்களை
பார்க்கலாம்.........

FILEகளைஐ அழிக்க முடியவில்லையா

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

COMPUTER PASSWORD மறந்து போனால் சில வழி


விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

திங்கள், 3 ஜூன், 2013

வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்
நாங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.
இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும்.
இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.
இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.
ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.
இணையதள முகவரி 

தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை பார்ப்பதற்கு

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது.
அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.
டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா? டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.
சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.
இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.

கணனியிலுள்ள கோப்புக்களை துல்லியமாக பேக்கப் செய்வதற்கான மென்பொருள்

கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்கு சீரான முறையில் கணனி வன்தட்டிலுள்ள கோப்புக்களை பேக்கப் செய்வது பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது.
இவ்வாறு பேக்கப் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் தரப்பட்ட போதிலும் அதனைவிட வினைத்திறனான முறையில் பேக்கப் செய்யும் மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் AISBackup எனப்படும் மென்பொருளும் சிறந்ததாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட கோப்புறைகள், கோப்புக்கள், வன்தட்டுக்கள், CD, DVD போன்ற அனைத்து வகையான சேமிப்பு சாதனங்களிலும் காணப்படும் தரவுகளை பேக்கப் செய்ய முடியும்.
இது தவிர பேக்கப் செயன்முறையை குறித்த கால இடைவெளியில் சுயமாகவே செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் பேக்கப் செய்யப்பட்ட தரவுகளை கடவுச்சொற்களைக் கொண்டு பாதுகாக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. தரவிறக்கச் சுட்டி:http://hotdownloads.com/trialware/download/Download_aisbi428dr.exe?item=4970-1&affiliate=49466

சனி, 1 ஜூன், 2013

Windows Movie Maker 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல் மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் சொற்பமானவையே இலவசமாகக் கிடைக்கின்றன.அவ்வாறு இல்லாது இலவசமாகவும், மிக இலகுவாக அனைவராலும் கையாளக்கூடிய வீடியோ எடிட்டிங் மென்பொருளாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows Movie Maker மென்பொருள் காணப்படுகின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான Windows Movie Maker 2012 மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றதுடன் இது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.


http://wl.dlservice.microsoft.com/download/A/1/0/A1018C6C-9E93-42A8-A87F-E3E1D0A8322F/en/wlsetup-all.exe

Mac கணனிகளுக்கான இலவச அன்டிவைரஸை பெற்றுக்கொள்ள...

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான Mac இயங்குதளங்களைக் கொண்ட கணனிகள் தனித்துவம் வாய்ந்தவை.இதன் காரணமாக அனைத்து விதமான கணனி மென்பொருட்களையும் இதில் நிறுவிப் பயன்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்ததே.
இதற்கென கிடைக்கும் மென்பொருட்களில் அனேகமானைவை இலவசமாகக் கிடைப்பதில்லை. இவ்வாறிருக்கையில் ClamXav எனும் அன்டி வைரஸ் புரோகிராம் ஆனது முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது.
இம்மென்பொருளானது விரைவாகக் செயற்படக்கூடியதாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுவதுடன் துல்லியமான முறையில் வைரஸ் புரோகிராம்களை கண்டு அவற்றினை நீக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி