Blogger Widgets

பக்கங்கள்

செவ்வாய், 25 ஜூன், 2013

கணினியில் உள்ள ட்ரைவ்களை மறைத்து வைக்க...

நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,


உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.



இதை செய்து முடித்த பிறகு  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி, குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு,  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off  செய்தால் போதுமானது.
தரவிறக்க சுட்டி :http://downloadave.net/Download%20AVE%20File/Software/new%20software/portable/dvd4/Security%20Tools/NoDrives%20Manager%201.2.0.rar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக