Blogger Widgets

பக்கங்கள்

சனி, 29 ஜூன், 2013

DOWN LOAD செய்கிறீர்களா ? எச்சரிக்கை குறிப்புகள்


இணையதளத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏதாகினும், ஒரு மென்பொருளை தங்களது தேவைகளுக்கேற்ப இணையதளத்தில் டௌன் லோட் செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது.
 
குறிப்பாக, இலவச மென்பொருட்களை நம்மில் பலர் டவுன் லோட் செய்து பயன்படுத்துகிறோம். இலவசமாக வழங்குவதன் மூலம், அந்த நிறுவனத்திற்கு நன்மை இருக்கவே செய்கிறது.
 
ஒன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்துவது.
 
மற்றொன்று அந்த மென்பொருளை டவுன் லோட் செய்யும்போது, டவுன் லோட் செய்யப்படுகிற மென்பொருளோடு ஸ்பை வேர், வைரஸ், போன்ற ப்ரோக்கிராம்களும் சேர்ந்து தரவிறங்கும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பாலான இலவச மென்பொருட்கள் இரண்டாவது வகையைத்தான் பின்பற்றுகின்றன. அப்படியெனில், இலவச மென்பொருள்களை பயன்படுத்துவது ஆபத்து என பொருளல்ல.
 
இலவச மென்பொருள்களை தாராளமாக பயன்படுத்தலாம். அதனுடன் சேர்ந்து, நமது கணிணியில் டவுன் லோடு ஆகும் ஸ்பை வேர், வைரஸ்களை நீக்குவது முக்கியம்.
 
நாம் டவுன்லோடைப் பயன்படுத்தும் மென்பொருட்களில் இதுபோன்ற தேவையற்ற ப்ரோக்ராம்கள் இருப்பதால், அவற்றை நீக்க வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள், ஸ்பைவேர் க்ளீனர் போன்ற நன்மை தரும் ப்ரொக்ராம்களை இயக்கி, அவற்றை நீக்கிவிடலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமும் இது போன்ற தேவையற்ற ப்ரோக்ராம்களை நீக்கி விடலாம்.
 
நாம் ஒரு இணையபக்கத்தில் டவுன் லோட் செய்யும்முன்பு, அப்பக்கத்தில் உள்ள இணைப்பின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
 
அம்மென்பொருளை பற்றி அளித்துள்ள கருத்துக்களையும், அப்பக்கத்தில் படித்து முடித்த பிறகே டவுன் லோட் செய்யத் தொடங்கவேண்டும். அவ்வாறு படிப்பதன் மூலம் ஓரளவிற்கு அம்மென்பொருட்களின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
 
மென்பொருள்களுக்குரிய உண்மையான தளத்திலிருந்து, டவுன் லோட் செய்வது நல்லது. பிற தளங்களிலிருந்து டவுன் லோட் செய்வது, பாதுகாப்பிற்கு சரியானதல்ல.
 
GOOGLE, YAHOO  போன்ற மிகப் பிரபலமான தேடல் வலைத்தளங்களைத் திறந்து, அதில் நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டிய மென்பொருளின் பெயர், அக்கோப்பின் பெயர், இவற்றோடு SPYWARE, VIRUS என்ற சொற்களையும் கொடுத்து தேடினால், இதற்கு முன்பே இம்மென்பொருட்களை டவுன்லோட் செய்து, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அவைகளைப் பற்றி மற்ற பயனர்கள் எழுதியிருப்பர், எச்சரிக்கை செய்திருப்பார்கள்.
 
இவ்வாறு தேடுவதால் மென்பொருளைப் பற்றி, பிறரின் எண்ணங்கள், கருத்துக்கள், பாதுகாப்பு நன்மைகள் குறித்து நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். எனவே, அந்த மென்பொருளைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
 
நாம் டவுன் லோட் செய்யவேண்டிய மென்பொருள் நல்லதா, கெட்டதா  எனத் தெரிந்துவிடும்.
 
டவுன் லோட் செய்து மென்பொருள் கோப்பினை நிறுவுவதற்கு முன், கணிணியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பயன்படுத்தி, சோதனை செய்து கொள்வது நல்லது. இதனால், மென்பொருளை நிறுவிய பிறகு ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துவிடலாம்.
 
இறுதியாக கணிணியில் உள்ள கோப்புகளை அடிக்கடி, பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கணிணியில் ஏதேனும் அபாயகரமான வைரஸ் தாக்குதல் ஏற்படும்போது கூட நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். தேவையெனில், கணிணியை ரீ – ஸ்டோர் செய்வதன்மூலம் மீண்டும் கணிணி பழைய நிலைக்கு வந்துவிடும்.
 
இவ்வாறு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மேற்கொள்வதன்மூலம் கணிணியில் வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தடுக்கமுடியும். நம்முடைய தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக