Blogger Widgets

பக்கங்கள்

செவ்வாய், 25 ஜூன், 2013

உங்க வெப்சைட் ஹேக் செய்யப்படாமல் இருக்கனுமா?

நிறைய தமிழ் நண்பர்கள் வெப்சைட் அல்லது ப்ளாக்குகளை நடத்திவருவது பாராட்டப்படவேண்டியது. மேலைநாடுகளில், பள்ளிகளில் பயில்பவர்கள் கூட ப்ளாக் வைத்திருப்பார்கள். ஆனால் நம்மில் பலருக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையும் படுவதில்லை, தெரிந்துகொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை.

சரி. நீங்கள் வெப்சைட், அல்லது ப்ளாக் வைத்திருந்தால் அதை ஹேக்கர்கள் தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? தகவல்கள் கீழே!




உங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்யுங்கள்:

நீங்கள் CMS என்ற கன்டன்ட் மேனஜ்மென்ட் சிஸ்டம் பயன்படுத்துபவரானால், உங்களுடைய சாப்ட்வேரை அப்டேட் செய்யுங்கள். இல்லை எனில், ஹேக்கர்கள் தாக்கக்கூடும். எனவே அதற்கான அப்டேட்கள் கிடைக்கப்பெற்றவுடன் நீங்களும் மாற்றிக்கொள்ளுங்கள்.

கடவுச்சொல்லில் கவனம்தேவை!

உங்களுடைய இணையதளத்துக்கான பார்வர்ட் என்ற கடவுச்சொல்லில் அதிகமாக கவனம் செலுத்துங்கள். எளிதில் அறிந்துகொள்ளும்படியான கடவுச்சொற்களை பயன்படுத்துதாதீர்கள். வலுவான கடவுச்சொல்லை தருவதே நன்று!


கூகுளின் வெப்மாஸ்டர் அமைப்பு:


கூகுள் நிறுவனம் தரம் வெப்மாஸ்டர் டூல் என்ற அமைப்பை பயன்படுத்துங்கள். உங்களுடைய தளத்தில் ஏதாவது ஹேக் நடந்தால் அது காட்டிக்கொடுக்கும். இது கூகுளின் அதிசிறந்த இலவச சேவை என்பதை நினைவில்கொள்க!

க்ஸ்பர்ட்ஸ் உதவியை நாடுங்கள்:

ஒருவேளை உங்கள் தளமானது பாதிப்புக்குள்ளாகும் முன்னர் தகுந்த மற்றும் திறமைகொண்ட எக்ஸ்பர்ட்ஸ் உதவியை நாடுங்கள். அதுவே மிகவும் நல்லது. அவர்கள் பணம்கேட்டல், நீங்கள் இலவசமாகவே இதற்கான குறிப்புகளை இணையதளங்களிலிருந்தும் பெறலாம். பல்வேறு தளங்கள் இலவசமாகவே தருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக