தொண்ணூறுகளின் இறுதியியிலும்,
இரண்டாயிரத்தின் முதலிலும் நீங்கள் கணினியில் பாடல்களை கேட்டிருந்தால்
Winamp என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் பாடல்கள்
கேட்பதற்கும், இணைய ரேடியோக்களை கேட்பதற்கும் பெரும்பாலானவர்கள்
பயன்படுத்தியது Windows Advanced Multimedia Products எனப்படும் Winamp
மீடியா ப்ளேயரைத் தான்!
மிகவும் பிரபலமான Winamp மீடியா ப்ளேயர் மென்பொருள் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி முதல் தனது சேவையை நிறுத்தப் போகிறது.
Winamp மீடியா ப்ளேயர் முதன்முதலாக Justin
Frankel, Dmitry Boldyrev ஆகியோரால் 1997-ஆம் ஆண்டு விண்டோஸ்
கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் எம்பி3 கோப்புகள்
இணையத்தில் பிரபலமானதால் அதனுடன் சேர்த்து Winamp மீடியா ப்ளேயரும்
பிரபலமானது.
1999-ஆம் ஆண்டு AOL நிறுவனம் NullSoft
என்னும் நிறுவனத்தையும், Winamp மென்பொருளையும் விலைக்கு வாங்கியது.
அதன்பின் Winamp மென்பொருள் NullSoft கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
Winamp மீடியா ப்ளேயர் MP3, MIDI, M4A,
WAV, WMA என்று பல்வேறு ஆடியோ கோப்பு வகைகளை சப்போர்ட் செய்தது. மேலும்
இந்த மீடியா ப்ளேயருக்கென்று பல்வேறு வடிவமைப்புகள் (Skins) வெளியானது.
இதனால் பலரின் மனதில் நீங்கா இடம்பெற்றது.
Winamp மீடியா ப்ளேயர் 2010-ஆம் ஆண்டு
ஆண்ட்ராய்ட் மொபைல், டேப்லட்களுக்காகவும், 2011-ஆம் ஆண்டு ஆப்பிள் மேக்
கணினிகளுக்காகவும் வெளியிடப்பட்டது.
இருப்பினும், Windows Media player, Real
Player போன்ற பல ப்ளேயர்களால் Winamp காணாமல் போனது. இன்றைய தலைமுறையினர்
பலருக்கு Winamp என்றால் என்னவென்றே தெரியாது.
இந்நிலையில் Winamp மீடியா ப்ளேயரை வரும்
டிசம்பர் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்போவதாக AOL நிறுவனம் அறிவித்துள்ளது.
அது வரை நீங்கள் Winamp மீடியா ப்ளேயரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
அதன் பின் அந்த தளம் இயங்காது.
லட்சக்கணக்கானவர்களின் மனதில் இடம்பெற்ற Winamp சகாப்தம் முடியப் போகிறது. அதனை வாழ்த்தி வழியனுப்புவோம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக