Blogger Widgets

பக்கங்கள்

செவ்வாய், 28 மே, 2013

முதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்

ஆப்பிள்-1 கணனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.இந்நிறுவனம் கடந்த 1976ம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கணனியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
அப்போது, இக்கணனி ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கணனி உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.
இந்நிலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட அப்பிள்-1 கணனி ஜேர்மனியில் உள்ள பிரகர் இல்லத்தில் ஏலம் விடப்பட்டது.
அந்த கணனியுடன், ஜாம்பவான்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலத்தில் விடப்பட்டது.
அவை ரூ.3.5 கோடிக்கு ஏலம் போனது. ஆனால், அதை ஏலம் எடுத்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக