Blogger Widgets

பக்கங்கள்

திங்கள், 20 மே, 2013

குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்


முதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7.5 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலத்தைக் கொண்டதும், 0.3 x 7 x 1.4 அங்குலம் என்ற அளவுப்பரிமாணமும், 2.8 பவுண்ட் எடையும் கொண்ட இச்சாதனத்தின் விலையானது 215 டொலர்கள் மட்டுமே. ">

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக