Blogger Widgets

பக்கங்கள்

புதன், 22 மே, 2013

நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்காணிப்பதற்கு!

உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து வைத்திருக்கும். அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
இதன் சிறப்பம்சங்கள்:
Record Each Keystroke: கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.
Instant Chat Messages Recording: பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
Track Emails: கணணியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.
Monitor Websites: கணணியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது.
Review Every Downloaded File: தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
http://keyloggerdownload.net/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக